அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்திற்குப் பிறகு இரட்டை மகிழ்ச்சி கிடைக்க இருக்கிறது. அகவிலைப்படி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. இது தீபாவளிக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும். பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி ஏனென்றால், தீபாவளிக்கு முன்பே 4% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். தீபாவளியை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 28ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி, மருத்துவச் செலவுத் தொகையும் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுகளுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்கள் 6-வது ஊதியக் குழுவின் கீழ் 14% அகவிலைப்படியைப் பெறுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி கோரிக்கையை மேற்கு வங்க அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் அகவிலைப்படி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
Read More : நீங்களும் உயில் எழுதி வைக்கப் போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!