fbpx

கிராம நத்தம் பட்டா வேணுமா? தமிழக அரசின் மாஸ் வசதி.. இனி எல்லாமே ஈஸி தான்..!! எப்படினு தெரிஞ்சுக்கோங்க..

தமிழகத்தில் 245 தாலுகா கிராம நத்தம் பட்டாக்களை ஆன்லைனில் இனி எளிதாக பதிவிறக்கம் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கிராம நத்தம் நிலங்களை பொறுத்தவரை, ஏழை மக்கள் குடியிருக்கவும், விவசாயம் செய்யவும் ஒதுக்கப்பட்டு வந்தன.. இவைகளை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது.. கிராம நத்தம் நிலத்தையும் கண்டிப்பாக வாங்கலாம். ஆனால், குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டும் இருந்தால் மட்டுமே வாங்கலாம். இதில் பல நடைமுறை சிக்கல்கள் வந்ததால், நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது. இப்போது நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதியையும் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://eservices.tn.gov. in/என்ற இணையதளம் வழியாக அரசு புறம்போக்கு நிலம், நகர நில அளவை போன்ற தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்களை கொண்டே ஒரு நிலத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் அளவு எவ்வளவு இருக்கிறது போன்ற தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த தகவல்களை வைத்து, நிலம் வாங்கும் போது அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்து, மோசடிகள் எதுவும் ஏற்படாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.

தற்போது, 245 தாலுகாக்களில் உள்ள கிராமங்களிலும் உள்ள நத்தம் குடியிருப்பு விவரங்களை அறிந்து கொள்ள வசதி கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஏனைய 57 தாலுகா கிராம நத்த இடங்களை பதிவு செய்யும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே, அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த பணிகள் முடிந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம நத்த இடங்களையும் மக்கள் எளிதாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இது மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். இந்த ஆவணங்கள் மூலம் மோசடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

அரசின் இணையதளத்தில் பட்டா விவரங்களை பார்க்கும் போது, மாவட்டம், தாலுகா, கிராம விவரங்களை தேர்வு செய்ய முடியும். அப்படி தேர்வு செய்யும் போது, நத்தம் என்ற ஒரு செக்‌ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை செலக்ட் செய்தால் நத்தம் தொடர்பான பட்டா வரைபட விவரங்களை பொதுமக்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Read more ; வேலை தேடும் இளைஞர்களா நீங்கள்? மாதம் ரூ.5000 உங்க அக்கவுண்டுக்கு வரப்போகுது..!! இத மட்டும் செய்ங்க..

English Summary

Tamil Nadu Government has arranged for easy online download of Natham land Patta of 245 villages in Tamil Nadu.

Next Post

ஆண்களே.. நீங்கள் செய்யும் இந்த தவறு, உங்களுக்கு வயதான தோற்றத்தை தரும்..

Sun Nov 10 , 2024
men-should-not-do-these-mistakes-while-shaving

You May Like