fbpx

பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்…! எப்படி பெறுவது…? என்னென்ன தகுதிகள்..?

சமூக நலன் மற்றும் மகளிர் அம்மையார் உரிமை நினைவு துறைமூலம் இலவச தையல் செயல்படுத்தப்படும் இயந்திரம் வழங்கும் சத்தியவாணி முத்து திட்டத்தின்கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் பொருட்டு 2023-24 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு விண்ணப்ப நாளன்று 20 முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் இருத்தல் வேண்டும், அரசுபதிவு பெற்ற தையல் பயிற்சி நிறுவனத்தில் குறைந்தது 6 மாதகாலம் தையல்பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.

ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் எனில் அதற்கென வட்டாட்சியர் மூலம் வழங்கப்படும் உரியசான்று இணைக்கப்பட வேண்டும். மேலும் கல்விசான்று,மாற்று சான்றிதழ், குடும்பஅட்டை, சாதிச்சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் பெண்கள் இதற்கு முன்னர் மேற்படி திட்டத்தின்கீழ் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த பின் அதன் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள நகல் சமூக ஒன்றினை நலவிரிவாக்க அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Vignesh

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு..! 10ஆம் வகுப்பு அசல் சான்றிதழில் ஏதேனும் பிழை இருந்தால்.. உடனே இதை செய்யுங்கள்…

Thu Aug 31 , 2023
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு சான்றிதழ் உயர்கல்வி பயில மிக முக்கியமான ஆவணமாக […]

You May Like