fbpx

“அனைவருக்கும் அனைத்தும்” குடியரசு தின விழா பேரணியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி…!

குடியரசு தின விழா பேரணியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது.

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 17 ஊர்திகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. குடியரசு தின விழா பேரணியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. குடவோலை முறையை விளக்கும் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினவிழா பேரணியில் பல்வேறு மாநில அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம் “அனைவருக்கும் அனைத்தும்” என்ற தமிழ்நாடு அரசின் வாசகமும் இடம்பெற்றுள்ளது.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Vignesh

Next Post

அட்டகாசம்...! ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழப்பை தடுக்க புதிய ஐடியா...! என்ன தெரியுமா...?

Sat Jan 6 , 2024
மாடுபிடி வீரர்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கென மதுரை அலங்காநல்லூர் பகுதியில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் 90% முடிவடைந்தது. இந்த மைதானத்தில் சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு எங்கே நடைபெறும் […]

You May Like