ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ரவி.
தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக மாறியிருக்கிறது. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக (முன்னாள்) நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள், நுண்ணறிவுத் துறையால் மதுரையிலும் கைப்பற்றப்பட்டது.
திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக போதையும் மருந்து கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 9 மணி அளவில் தமிழக ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அவர் எது குறித்து பேச உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.