fbpx

தமிழகமே ஷாக்!. விபத்துகளில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த சோகம்!

Accident:தமிழகத்தின் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் ரெண்டலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அருணா (23). இவர்களுக்கு ரக்ஷன் ஜோ (7) என்ற மகனும் ரக்ஷிதா என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் ஜோசப், மோட்டார் பைக்கில் ரெண்டலபாறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது நல்லாம்பட்டி பிரிவில் அந்த சாலையில் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. திடீரென எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜோசப், அருணா, அவர்களது இரு குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். பின்னர் பாதிரியார் குழந்தைசாமி (48) என்பவரின் டூவீலர் மீதும் கார் மோதியது. இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர். பாதிரியார் குழந்தைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். கார் டிரைவர் பிரவீன் குமார்(27) கைது செய்யப்பட்டார். தகவலறிந்த திண்டுக்கல் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் பலத்த காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(43). ஆசிரியர். கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பாலமுருகன் கலைக்குழுவை சேர்ந்த சவ்வாஸ்புரம் பகுதியை சேர்ந்த மணி(18), சின்னத்துரை(22), நெல்லை மாவட்டம், நடுவக்குறிச்சி முகமது அப்துல் ராசிக் ஆகிய 4 பேர், காரில் வெளியூர் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். அருப்புக்கோட்டை அருகே சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் சென்றபோது, கார் திடீரென சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இதில் 4 பேரும் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!. அப்பாவி பொதுமக்கள் 32 பேர் பலி!. சோமாலியா கடற்கரையில் பயங்கரம்!

English Summary

Tamil Nadu is shocked! 9 people including 2 children died in accidents! Tragedy happened in the blink of an eye!

Kokila

Next Post

மாநிலம் முழுவதும் இனி இரவு 11 மணி வரை மது கடைகள் இயங்க அனுமதி...! முதல்வர் உத்தரவு...

Sun Aug 4 , 2024
Liquor shops are allowed to operate till 11 pm across the state

You May Like