ரூ.545 கோடியில் அமைக்கப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்று பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதனையடுத்து புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில் சேவை தொடங்கியது. ராம நவமி நாளில் ராமேஸ்வரம் கோவிலில் வழிபட்டார். தொடர்ந்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “பாம்பன் பாலம், பல லட்சம் பேரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்; பயணங்களை எளிமையாக்கும். 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி இருக்கிறது; இதற்கு காரணம் பல்வேறு கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 6 மடங்கு உயர்த்தியது தான்.
தேசத்தின் முதலாவது புல்லட் ரயில் திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. தமிழகத்தின் வலிமை உயர்ந்தால் இந்தியாவின் வளர்ச்சியும் விரைவாகும். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 2014-க்கு முன்னர் திமுக கூட்டணி ஆட்சியில் கொடுத்ததைவிட 3 மடங்கு கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்திருக்கிறது.
மத்திய அரசு இவ்வளவு செய்தும் சிலர் அழுது கொண்டே இருக்கின்றனர்; அவர்களால் அழத்தான் முடியும்; அவர்கள் அழுதுவிட்டு போகட்டும் என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்களை பட்ட்யலிட்டு விவரித்தார். அதாவது, நாட்டின் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள் ஏழைகளுக்கு கிடைத்துள்ளன; தமிழ்நாட்டில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் ஏழைகளுக்கு கிடைத்துள்ளன. ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டி மட்டும் 1,400 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கின்றன. இதன் மூலம் மக்களுக்கு ரூ700 கோடி சேமிப்பாகி உள்ளது. தமிழ்நாட்டுக்கு 10 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்துள்ளோம். தமிழில் மருத்துவ படிப்பை கொண்டுவர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏழை குழந்தைகளும் மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் படிக்க, நூல்களை தமிழில் தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும்
தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு சுமார் ரூ12,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை மத்திய அரசு தந்து வருகிறது. பிரதமர் மீன்வள திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு பல நூறு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார். தமிழ் மொழி, மரபு அனைத்து இடங்களுக்கும் சென்று சேர மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழக தலைவர்கள், கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்திடுகின்றனர்; தமிழில் கையெழுத்திடுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
Read more: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு.. பிரதமர் மோடி கொடியசைத்ததும் சீறிப்பாய்ந்த கப்பல்..!!