fbpx

எம்.பி.பி.எஸ் படிப்பில் மத்திய அரசின் பொதுக் கலந்தாய்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன.

மத்திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்துவதால் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்படும் 69% இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கல்வியாளர்கள், மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப கடந்த காலங்களைப் போல மாநில அரசே கலந்தாய்வு நடத்தவும், மீதமுள்ள 15% இடங்களில் மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தவும் வழிவகை செய்வதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Maha

Next Post

இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்

Mon Jun 12 , 2023
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா ரஹ்மான், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் புதியப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘பூவரசம் பீப்பீ’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவர், அடுத்ததாக ‘மின்மினி’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கடந்த வருடம் (2022) ஆரம்பித்ததாக இயக்குநர் ஹலிதா […]

You May Like