fbpx

இன்று உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…! இடி மின்னலுடன் கனமழை பெய்யும்…!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்காலில் இருந்து கிழக்கு – வடகிழக்கே சுமார் 470 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு – வடமேற்குத் திசையில் தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

#Alert..!! 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!! தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!

இதன் காரணமாக வடதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாடு ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24,25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

விசாரணையில் அதிர்ச்சி...! ஏரியாவில் பிரபலமாக சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது அம்பலம்...!

Tue Nov 22 , 2022
ஏரியாவில் பிரபலமாக சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிய, இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், இனியன் என்ற மகன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் சக்கரபாணி, இந்து முன்னணியில் கும்பகோணம் மாநகரச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், சக்கரபாணி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டின் முன்ப ாக வருமானவர்கள் […]

You May Like