காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர், பாஜகவின் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன்(93) காலமானார். 5 முறை சட்டமன்ற உறுப்பினர், காந்தியவாதி, காகாதேக என்கிற கட்சியின் நிறுவனர். இவர் எழுத்தாளர், தமிழ் ஆர்வலரும் ஆவார்.
கடந்த சில தினங்களாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார்.
5 முறை சட்டமன்ற உறுப்பினர், காந்தியவாதி, காகாதேக என்கிற கட்சியின் நிறுவனர். இவர் எழுத்தாளர், தமிழ் ஆர்வலரும் ஆவார். சாத்தான் குளம் ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்லிலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் வர காரணமாக இருந்தவர்.தமிழில் தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும் என போராடி பெற்று தந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.