வேலைவாய்ப்பகங்கள் மூலமாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் யாருக்கு முதலில் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் தற்போது அரசு வெளியிட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக ஒரு வேலை ஒரு குடும்பத்தில் இரட்டையார்களாக பிறந்திருந்தால் அதில் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படும்? என்ற குழப்பம் இருந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தெளிவான விளக்கம் ஒன்றை வழங்கி இருக்கிறது.
அதாவது ஒரு குடும்பத்தில் கல்வி கட்டண சலுகையை பயன்படுத்தி ஒருவர் பட்டப்படிப்பில் சேருகிறார் என்றால், அதே குடும்பத்தில் கல்வி கட்டண சலுகை இல்லாமல் இரண்டாவதாக ஒருவர் பட்டப்படிப்பில் சேர்கிறார் என எடுத்துக்கொள்வோம்.
இதில் கல்வி கட்டண சலுகையை பயன்படுத்தி ஒருவர் படிப்பில் சேர்ந்து அவர் பட்டப் படிப்பை முடிக்கவில்லை. ஆனால் கல்வி கட்டண சலுகை இல்லாமல் பட்ட படிப்பில் சேர்ந்த அந்த நபர் முதலில் பட்டப் படிப்பை முடித்து விடுகிறார் என்றால், அந்த கல்வி கட்டண சலுகை இன்றி பட்டப்படிப்பில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தவருக்கு தான் முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கல்வி கட்டண சலுகையில் ஒருவர் பட்டப்படிப்பில் சேர்ந்து அந்த கல்வி கட்டணம் இல்லாமல் பட்ட படிப்பில் சேர்வதற்கு முன்னால் படிப்பை முடிக்கிறார் என்றால் அப்போதும் அந்த கல்வி கட்டணம் இல்லாமல் பட்டப்படிப்பு சேர்ந்தவருக்கு தான் முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணன், தம்பி அவர்களுடைய மனைவி, மகள், மகன் ஆகியோருடன் ஒன்றினைந்து ஒரு கூட்டு குடும்பமாக வசித்தால் அந்த குடும்பத்தில் முதலில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு மட்டும் முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படலாம்.
ஆனால் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்குவது குறித்து அதே குடும்பத்தில் இன்னொருவர் ஆட்சேபனை தெரிவித்தாலோ, நீதிமன்றத்தை நாடினாலோ அத்தகைய தேர்வுகளில் மேற்கொள்வதற்கு அல்லது நடவடிக்கைகள் எடுப்பதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிவின்படி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.