fbpx

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (மே 26) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘ரீமல்’ புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து நள்ளிரவு (26.05.2024) 10.30 மணி – (27.05.2024) 12.30 மணி அளவில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவுக்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவுக்கும் (வங்கதேசம்) இடையே கரையை கடந்தது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு அல்லது மேற்கு திசை காற்று நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (27.05.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 28 முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 31 முதல் ஜூன் 02 வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : யார் யார் மைதா சாப்பிடவே கூடாது..? பரோட்டா சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகளா..?

English Summary

According to the Meteorological Department, rain is likely to occur in various parts of Tamil Nadu today.

Chella

Next Post

கொலஸ்ட்ரால் பற்றி இனி கவலை வேண்டாம்..!! ஈசியா குறைக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Mon May 27 , 2024
High cholesterol can be managed with a few simple lifestyle and dietary changes

You May Like