fbpx

தமிழகமே அலர்ட்!. இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!.

Rain: வங்கக்கடலில் இன்று (செப்.5)குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக செப்டம்பர் 3ம் தேதிமுதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து வந்தது. அதன்படி, சென்னையிலும் நள்ளிரவு நேரங்களில் மழை கொட்டியது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகக்கூடும்.

இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை முதல் (செப். 6) செப்.10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்.4 முதல் 8ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Readmore: பாராலிம்பிக்!. ஒரேநாளில் 2 தங்கம் உட்பட 2 வெள்ளி!. பதக்கங்களை தட்டித்தூக்கும் இந்தியா!. அதிகபட்சமாக தடகளத்தில் 11 பதக்கங்கள்!.

English Summary

Tamilnadu is on alert! A low pressure area is forming today!

Kokila

Next Post

சற்றுமுன்...! பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி சுற்றறிக்கை ரத்து...!

Thu Sep 5 , 2024
Ganesha Chaturthi pledge circular for schools cancelled

You May Like