fbpx

சிறையிலும் வந்தாச்சு வீடியோ கால்.! எவ்வளவு நேரம் பேசலாம்.? நிபந்தனைகள் என்ன.?

சிறைச்சாலைகள் என்பவை கைதிகளுக்கு தண்டனை கொடுக்கும் இடமாக மட்டுமில்லாமல் அவர்களை பண்படுத்தும், திருத்தும் களமாகவும் செயல்பட்டு வருகிறது. சிறையில் கைதிகளுக்கு கல்வி போதிப்பதில் இருந்து பல்வேறு விதமான பணிகளும் மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

அவர்களது வாழ்க்கை மேம்படுவதோடு அவர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இதனால் சிறை துறை கைதிகளுக்கு வழங்கும் சலுகைகளில் ஒவ்வொரு வருடமும் புதிய வரைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசி பேசும் நேரத்திற்கான புதிய வரம்புகளை அறிவித்திருக்கிறது தமிழக சிறைத்துறை.

இந்த புதிய வரம்புகளின் அடிப்படையில் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசும் கால அளவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கைதிகளுக்கு தொலைபேசியில் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வசதி 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசும் வசதியும் 56 நிமிடங்களில் இருந்து 120 நிமிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகளின் மன அழுத்தம் குறையும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Post

வெளிமாவட்டத்தினர் ரூ.6,000 கிடைக்க எப்படி விண்ணப்பிக்கலாம்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Wed Dec 13 , 2023
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் 6,000 ரூபாய் நிவாரண தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பெரும்பாலான கடலோர பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தோர் பெரிதாக பாதிக்கப்பட்டனர். இன்னும் புறநகரில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் […]

You May Like