தமிழ்நாடு வானிலை தொடர்பான செய்திகளை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், மழையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான பிரேக் இன்று கிடைக்கும். 12ம் தேதி முதல் மீண்டும் மழைக்காலம் ஆக்டிவ் ஆகும். சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ஆக்சன் முதலில் தொடங்கும். அதன்பின் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் மழை பெய்யும். 12ம் தேதியோயில் இருந்து நல்ல மழை காலம் ஏற்படும். என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் , தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
குறிப்பாக இன்று மற்றும் நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியது.
அதன்படியே, சென்னை, நெல்லை. கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், தமிழகத்திற்கு ஒரு சரியான விடுமுறை நாள் என்றால் நவம்பர் 12 தான். அந்த நாள் முதல் பருவமழை தீவிரம் அடையும் என தமிழ் நாடு வேதர் மென் பிரதீப் ஜான் தகவலைக் கொடுத்துள்ளார்.