தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் பார்கள் சரியான சமயத்தில் மூடப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைநகர் சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பித்திருகிறார். நேற்று காலால் துறை அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில், டாஸ்மாக் அவர்கள் சரியான சமயத்தில் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், டாஸ்மார்க் மற்றும் மதுபானம் விற்பதற்கு உரிமம் பெற்றுள்ள மற்றும் ஹோட்டல்கள் விதிமீறல் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.