நார்மலான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு செஞ்சி கொடுத்து போரடிக்குதா டிஃபரண்டா ஒரு டிஸ் செஞ்சு உங்க வீட்டு குட்டீஸ்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா.? வாங்க இந்த இளநீர் ஜெல்லி ட்ரை பண்ணி பார்க்கலாம்.
இது செய்வதற்கு ஒரு இளநீர், ஒரு பாக்கெட் ஜெல்லி பவுடர், 250 கிராம் சீனி மற்றும் சங்குப்பூ ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அவற்றுடன் ஜெல்லி பவுடர், சீனி, இள தேங்காயையும் சின்ன சின்னதாக வெட்டி அதில் சேர்க்கவும் மற்றும் ஒரு சங்குப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
சிறிது நேரம் கொதித்த பின் அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் ஐஸ் க்யூப்ஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுவையான இளநீர் ஜெல்லி ரெடி வாங்க சாப்பிடலாம்.