fbpx

மாணவி மீது ஏற்பட்ட மோகம்; வேறு ஊருக்கு அழைத்து சென்று, ஆசிரியர் செய்த காரியம்..

கர்நாடகா மாநிலம், மாண்டியா ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் கவுடா. 25 வயதான அபிஷேக் டியூசன் வகுப்பு நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயது குழந்தை ஒன்று உள்ளது. இவரிடம் மாணவர்கள் பலர் டியுஷன் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இவரிடம் டியூசன் படிக்க வந்த சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், சம்பவம் குறித்து ஜே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், டியூசன் வந்த சிறுமியுடன், அபிஷேக்கு காதல் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அபிஷேக் மற்றும் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாலவள்ளி பகுதியில், போலீசார் சிறுமியுடன் அபிஷேக்கை கண்டு பிடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சிறுமியை மீட்ட போலீசார், அபிஷேக்கை கைது செய்த கடத்தல், சிறுமி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒழுக்கம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரே இது போன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: முழு பணம் செலுத்திய பிறகும் வீடு வழங்காத நிறுவனம்.. முடிவுக்கு வந்தது 11 ஆண்டு கால போராட்டம்..!! – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

English Summary

teacher fell in love with the student in karnataka

Next Post

"எனக்கு குடும்ப கவுரவம் தான் முக்கியம்" விருந்து உணவில் விஷம் கலந்த தாய்மாமா; இறுதியில் நடந்த ட்விஸ்ட்..

Thu Jan 9 , 2025
man poured poison into the food which was kept for feast

You May Like