மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் உள்ள சேந்தங்குடி மெயின்ரோட்டையில் சீனிவாசன் எனபவர் (38) அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தி உள்ளார். இது பற்றி பெற்றோருக்கு தெரிய வரவே சென்ற 16ம்தேதி மயிலாடுதுறையில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையில் விசாரணையில் ஆசிரியர் சீனிவாசன் இவ்வாறு பல மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயபடுத்தியது தெரியவந்துள்ளது.
தனது விவகாரம் தொடர்பாக வெளியே தெரிந்ததால் மனமுடைந்த ஆசிரியர், வீட்டில் எலிபேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அத்துடன் மயங்கி விழுந்த அவரை மீட்டு, குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.