கர்நாடக மாநில பகுதியில் நரசாபுரா கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளியில் பிரகாஷ் என்ற ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். சென்ற 2 நாட்களுக்கு முன்னர், வகுப்பறையில் மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார்.
வகுப்பறையில் மாணவ- மாணவிகளிடம் முதலிரவு என்றால் என்ன..? என்றும் மற்றும் ஹனிமூன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கணவன் மனைவிகளுக்குள் நடக்கும் தாம்பத்யம் மேலும், தனது செல்போன் மூலம் வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் ஆபாச படங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது.
அது பற்றி மாணவ- மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில், உடனடியாக கல்வித்துறை அதிகாரி பள்ளிக்கு சென்று சம்பவம் குறித்து மாணவ- மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். அத்துடன் பிரகாஷ் குறித்து மாணவ- மாணவிகள் ஒன்றுவிடாமல் அனைத்தையும் தெரிவித்தனர். இதையடுத்து பிரகாஷை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.