fbpx

ஆசிரியர்கள் போராட்டம்.. இரவு 8 மணி வரை தான் டைம்.. காவல்துறை கெடு..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை காவல்துறை கெடு. போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சேகர் தேஷ்முக்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, நூற்றுக்கணக்கான இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் மூன்று சங்கங்கள் பங்குபெற்றுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் போராட்டத்தை இன்று இரவுக்குள் கைவிடுமாறு திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சேகர் தேஷ்முக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் இது குறித்து தெரிவிக்கும்போது, மேலும் 3 ஆசிரியர்கள் சங்கங்கள் அனுமதி கேட்டிருப்பதாலும், தொடர்ச்சியாக போராட்டங்களை அனைத்து சங்கங்களும் நடத்தினால் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு எப்படி மேற்கொள்வது என்றும், தெளிவாக பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் போராட்டம் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடித்தியதால், கைவிடுமாறு தெரிவித்தார். மேலும் இரவு 8 மணிக்கு முன்பாக இந்த போராட்டத்தை கைவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக TET ஆசிரியர்கள் சங்கம் சார்பாக இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேசியதாகவும், அவர் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி விட்டு இன்று இரவு 8 மணிக்குள் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Kathir

Next Post

சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம், இத்தனை ஆயிரமா??

Tue Oct 3 , 2023
எத்தனை படங்கள் வந்தாலும் பெண்கள் மத்தியில் என்றும் நிலைத்திருப்பது சீரியல் தான். அதிலும் சில சீரியல்களில் நடிப்பவர்களுக்கு தீவிர ரசிகர் பட்டாளமே இருப்பது உண்டு. இன்னும் சிலர் சீரியலில் வரும் காதபாத்திரங்களை நிஜ வாழ்கையில் தங்களோடு இருப்பவர்கள் போல் திட்டுவது உண்டு, அட்வைஸ் பண்ணுவது உண்டு. இந்நிலையில், டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருப்பது சன் டிவி சீரியல் தான். சன் டிவியில் காலையில் இருந்து இரவு வரை சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கும். […]

You May Like