fbpx

சென்னை அருகே போலி பாஸ்போர்ட் விசா உள்ளிட்டவை தயாரித்த வழக்கில்….! தலைமறைவாக இருந்த தெலுங்கானா ட்ராவல்ஸ் ஏஜென்ட் அதிரடி கைது….!

சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனராகத்தின் உதவி இயக்குனர் சென்ற மாதம் 19 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அதில் சென்னை ராயபுரம் பகுதியில் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்ற நபர் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயார் செய்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முகமது ஷேக் இலியாஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைத்து வைக்கப்பட்டனர்.

தொடர் விசாரணையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் அகமது அலி கான் 42 எந்த வருடம் முக்கிய குற்றவாளி என்ற விவரம் தெரிய வந்தது இந்த நிலையில் தனி படை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அகமது அலி கானை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் அகமது அலிகான் மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக ட்ராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருவதும், இதன் மூலமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்க சுமார் 150 போலி பாஸ்போர்ட், விசா ஸ்டாம்பிங் செய்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. விசாரணைக்குப் பிறகு அகமது அலி கான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

பகுதி நேர வேலை வாய்ப்பு என்று கூறி மோசடி….! 10 லட்சத்தை இழந்த வங்கி மேலாளர்…..!

Mon Jun 12 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் கொலாபாவில் இருக்கின்ற வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் 34 வயதான ஒரு நபரிடம் வாட்ஸ் அப் மூலமாக 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. அப்போது இணையதளம் மூலமாக பகுதி நேர வேலை வாங்கி தருவதாக தெரிவித்து அந்த கும்பல் வங்கி மேலாளர் இடமிருந்து 10 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வங்கியின் மேலாளர் வீடு சிபிடி பலாப்பூரில் இருக்கின்ற […]

You May Like