fbpx

அலர்ட்…! தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக வேலூர், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் மேலூர், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனிக்கோட்டை, மதுரை மாவட்டம் பெரியபட்டி, மதுரை மாவட்டம் தானியமங்கலம் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

English Summary

Temperatures likely to rise above normal in Tamil Nadu today and tomorrow

Vignesh

Next Post

UGC முக்கிய அறிவிப்பு...! இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம்...! விண்ணப்பிக்க நாளை கடைசி...!

Mon Apr 14 , 2025
UGC important announcement...! Recognition for online courses...! Last date to apply tomorrow

You May Like