fbpx

இன்று வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ‌

English Summary

Temperatures will rise above normal today

Vignesh

Next Post

உக்ரைனுக்கு இறுதி எச்சரிக்கை!. இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய வெடிகுண்டு வீசப்படும்!. ரஷ்யா பகிரங்க மிரட்டல்!

Mon Sep 16 , 2024
Final warning to Ukraine! The biggest bomb ever made will be dropped!. Russia public threat!

You May Like