fbpx

#BREAKING: 3வது முறையாக துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..! இதுவரை 1900 பேர் பலி…

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. ஒரு நிமிடம் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

10 மாகாணங்களில் ஏற்பட்ட இந்த அதிதீவிர நிலநடுக்கத்தால் 1,200க்கும் மேற்பட்டோர் பலி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலநடுக்கத்தால், சிரியாவிலும் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் இதைத்தொடர்ந்து துருக்கியில் இன்று மாலை 3.54மணிக்கு,இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது துருக்கியில் மூன்றவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த நிலநடுக்கமானது மாலை 5.32மணிக்கு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் பலர் பலியாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் துருக்கியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Kathir

Next Post

வங்கதேசத்தில் கோவில்களின் மீது தாக்குதல் சிலைகள் உடைப்பு! கடுமையான நடவடிக்கைக்கு காவல்துறை உறுதி!

Mon Feb 6 , 2023
சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள இந்து கோவில்களின் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள  இந்து கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருக்கும் சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்றாலும்  இங்கு கணிசமான அளவில் இந்துக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஏராளமான இந்து கோவில்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று  […]

You May Like