fbpx

சென்னையில் பயங்கரம்..!! பயங்கரவாத அமைப்பு ஆட்சேர்த்த பேராசிரியர்..!! யூடியூப் மூலம் பிரச்சாரம்..!! களத்தில் இறங்கிய NIA..!!

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பிரிவு இயங்கி வருகிறது. இதேபோல, சென்னை காவல்துறையிலும் கூடுதல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை உள்ளது. தனிப்படை போலீஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர். அதன்படி, சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலின் செயல்பாட்டை கண்காணிப்பு குழுவினர் கண்காணித்தனர். அந்த சேனலில், சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பேராசிரியர் ஹமீது உசேன் என்பவர் இதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல்ரகுமான் ஆகியோர் ராயப்பேட்டையில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, அந்த கூட்டத்தில் பங்கேற்பவர்களை மூளைச் சலவை செய்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் திரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் உட்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பேராசிரியர் ஹமீது உசேன், பொறியியல் படித்தவர். முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் சில காலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், அவர் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில், இந்திய தேர்தல் முறைக்கு எதிராகவும், மதம் சார்ந்த அடிப்படை சித்தாந்தம் தொடர்பாகவும் பேசி பிரச்சாரம் செய்துள்ளார். இதில் ஈர்க்கப்பட்டு தொடர்புகொள்ளும் நபர்களை, ராயப்பேட்டையில் ஞாயிறுதோறும் நடைபெறும் கூட்டத்துக்கு வரவழைத்துள்ளார். அவர்களை மூளைச் சலவை செய்து, தடை செய்யப்பட்ட அமைப்பில் ஈடுபடுத்தியுள்ளார்.

ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோரும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (UAPA – உபா) வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களது வீடு, கூட்டம் நடந்த இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றனர்.

Read More : ஜூன் 6இல் பள்ளிகள் திறப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு..!!

English Summary

In Chennai, 6 people, including a professor, have been arrested for supporting a terrorist organization, and the NIA has started an initial investigation in this regard.

Chella

Next Post

விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம்..!! அமைச்சர் உதயநிதிக்கு முக்கிய பதவி..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Mon May 27 , 2024
After the results of the Lok Sabha elections, it has been reported that Chief Minister Mukherjee Stalin is planning to reshuffle the cabinet.

You May Like