fbpx

சீனாவில் பயங்கர நிலச்சரிவு!. மண்ணில் புதைந்த வீடுகள்!. மாயமான 30 பேரின் நிலை என்ன?. தேடும் பணி தீவிரம்!

Landslide: தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமான 30க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. தற்போது வரை மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீன ஜனாதிபதி அந்நாட்டு அதிகாரிகள் உடனடியாக மாயமானவர்கள் தேடி மீட்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்நாட்டு பிரதமர் லி கியாங் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களின் புவியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் வேறுயிடங்களுக்கு மாற்றப்பட்டு மற்றொரு பேரிடர் தடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Readmore: ”உடற்பயிற்சியே செய்தாலும் இவர்களுக்கு இதயநோய் வருமாம்”..!! புதிய ஆய்வில் முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Terrible landslide in China!. Houses buried in the ground!. What is the condition of the 30 missing people?. Search operation intensifies!

Kokila

Next Post

இந்த நோய்க்கு 'Pregabalin’ மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துறீங்களா..? உயிரே போகும் அபாயம்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Sun Feb 9 , 2025
Doctors have warned against taking too many Pregabalin tablets for problems such as epilepsy, nerve pain, and anxiety.

You May Like