Accident: ஒடிசாவில் சுற்றுலா பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மேற்கு வங்க மாநிலம் திகஹா பகுதிக்கு செல்லவிருந்தனர். அப்போது, ஜாஜ்பூர் அருகே பராபதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடந்த சம்பவம் குறித்து அறிந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தலா ரூ. 3 லட்சம் நிதிவழங்கிட உத்தரவிட்டார்.