தமிழக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்…!

முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணியின் தலைவருமான இந்திரகுமாரி, உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டிருந்த இந்திரகுமாரி, அதிமுக சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991 ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1991-96 வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். பின்னர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kathir

Next Post

’எப்படிப்பட்ட அல்சரும் இதை குடித்தால் சரியாகிடும்’..!! நீங்களே வீட்டில் செய்யலாம்..!!

Tue Apr 16 , 2024
உண்ணும் உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும். தாமதமின்றி, 3 வேளை உணவையும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஆனால், வேலை, டயட் போன்ற காரணங்களால் பலர் உணவை தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ருசிக்காக காரசாரமான உணவை சாப்பிட்டு வந்தால் குடல் பகுதியில் புண் ஏற்படும். அல்சர் அறிகுறிகள் : *வயிறு எரிச்சல் *வயிற்று வலி *எடை குறைவு *மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் *வயிறு உப்பசம் அல்சர் பாதிப்பை குணமாக்கும் […]

You May Like