fbpx

எல்லையில் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த கண்ணிவெடி தாக்குதல்!. 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

Terrorists: ஜம்மு காஷ்மீரின் அக்னூர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் வைத்த சக்திவாய்ந்த கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

ஜம்முவின் அக்னூர் செக்டார், லலேலி பகுதியில் கட்டுப்பாட்டுக்கு எல்லைக் கோட்டுக்கு அருகில் ராணுவ வீரர்கள் நேற்று பிற்பகலில் ரோந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் கேப்டன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சையில் இருக்கும் வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் நவ்ஷெரா செக்டார் கலால் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்தார். முதல்கட்ட விசாரணையில் எல்லைக்கு அப்பால் இருந்து அவர் சுடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Readmore: தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடங்கள்! சென்னை டூ திருச்சி!. கையெழுத்தான மெகா திட்டம்!. மத்திய அரசு மாஸ் பிளான்!

English Summary

Terrorists launch powerful landmine attack on border! 2 soldiers martyred!

Kokila

Next Post

சூப்பர் திட்டம்..! ஆடு, மாடு வங்க மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சம்... இந்த 6 ஆவணம் இருந்தால் போதும்...! முழு விவரம்

Wed Feb 12 , 2025
Cow Bengal Central Government will provide Rs. 5 lakh... These 6 documents are enough

You May Like