fbpx

கருவை கலைத்ததால்…..! காதலியை சுட்டுக் கொலை செய்த காதலன்….!

அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஹெரால்டு தாம்சன் (22) வயதான இவர் தன்னைவிட 4 வயது மூத்த நபரான கேப்ரியல்லா கொன்சலாஸ் என்பவருடன் மிக நீண்ட நாட்கள் காதல் உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறார். இந்த கர்ப்பத்தின் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ள அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே கருவை கலைத்துவிடுகிறேன் என்று காதலனிடம் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் காதலன் ஹெரால்டு அவர் கருவை கலைப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இப்படியே சில வாரங்கள் கடந்து வந்த நிலையில், கரு ஏற்பட்டு 6 வாரங்களை கடந்துள்ளது.

இந்த நிலையில், தன்னுடைய காதலனுக்கு தெரியாமல் கருவை கலைத்து விடலாம் என்று அந்த பெண் முடிவு செய்தார். அந்த இருவரும் வசிக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் 6 வாரம் கடந்த கருவை கலைப்பது சட்டவிரோதமாகும். ஆகவே அங்கிருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொலாரேடோ மாகாணத்திற்கு சென்று கருவை கலைத்திருக்கிறார் அந்த பெண்மணி.

அதன் பிறகு அந்தப் பெண் தன்னுடைய ஊருக்குத் திரும்பிய நிலையில், காதலன் ஹெரால்டுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். காரில் அவர்கள் சென்று கொண்டிருந்த போதுதான் தான் கருவை கலைத்த விஷயத்தை அந்த பெண் கூறி இருக்கிறார். இதை கேட்டு காதலன் ஹெரால்ட் அதிர்ச்சியும் ஆச்சரியத்துடனேயே காரை ஓட்டி இருக்கிறார் கோபத்துடனே காரை ஷாப்பிங் மாலில் இருக்கின்ற பார்க்கிங் பகுதிக்கு ஓட்டிச் சென்ற அவர் அங்கு வைத்து காதலியை கழுத்தை நெரிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவருடைய பிடியிலிருந்து அந்தப் பெண் தப்பி சென்று விடலாம் என்று நினைத்தபோது, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து காதலியை சுட்டு இருக்கிறார். ஹெரால்டு குண்டு உடம்பில் பாய்ந்து சரிந்து விழுந்த அவர், அங்கேயே மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, கண்காணிப்பு கேமரா காட்சியின் ஆதாரங்களின் அடிப்படையில், காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறது

Next Post

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணினி ஆசிரியர்…..! கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை…..!

Mon May 15 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள தில்கார் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அனில் குமார். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முகமதுஅலி என்ற ஆசிரியர் கணினி படங்களை எடுத்து வந்தார். இவர் அங்கே படிக்கும் பல மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை வழங்கி வந்ததாக புகார் எழுந்தது. 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் சுமார் 12 […]

You May Like