fbpx

மகிழ்ச்சி…! காலாண்டு விடுமுறை முடிந்தவுடன்…! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…!

பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2023-2024 ஆம் கல்வியாண்டில் , காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கும் நாள் 03.10.2023 ஆகும்.

பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பி வைத்திட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உஷார்...! கடல் பகுதிகளில் 65 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று...! மீனவர்களுக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!

Thu Sep 28 , 2023
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல்| மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 30 முதல் அக்டோபர் […]
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like