fbpx

தகைசால் தமிழர் விருது.. இந்த ஆண்டு யாருக்கு தெரியுமா..?

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ விருது என்ற விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது.. ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழுடன் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை சார்பில் இந்த விருது வழங்கபடுகிறது..

முதலமைச்சர் தலைமையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரை அடங்கிய குழு இந்த விருது பெறுவோரை தேர்வு செய்து வருகிறது.. அதன்படி, இந்த ஆண்டுக்கான தகைசால் விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், தகைசால் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. சிறந்த தன்னமலமற்ற அரசியல்வாதியாக பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் பெரும்பங்களித்த நல்லக்கண்ணுவுக்கு தகைசால் விருது வழங்கப்பட உள்ளது.. ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவருக்கு வழங்குகிறார்.. அன்றைய தினம் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்..

கடந்த ஆண்டு, விடுதலை போராட்ட வீரரும், முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான என். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

விறகு அடுப்பிற்கு மாற்றம்... கடந்த ஆண்டு 13 லட்சம் குடும்பங்கள் ஒருமுறை கூட சமையல் எரிவாயு வாங்கவில்லை...

Sat Aug 6 , 2022
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக சமயல் எரிவாயு சிலிண்டர் பவாங்க விண்ணப்பிக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஒரே குடும்பத்தில் பல இணைப்புகளை வைத்திருப்பது, குடும்பங்களின் […]

You May Like