fbpx

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய நபருக்கு ஆயுள் தண்டனை….! போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு……!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோவில் அருகே மருதாநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மகன் ராஜேந்திரன் (45) இவர் மீது கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி சிறுமி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார் என்று நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல் ஆய்வாளர் கே.ரேகாராணி மற்றும் காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,குற்றவாளியான ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க..!! உங்கள் பார்ட்னரிடம் இந்த தவறை பண்ணாதீங்க..!!

Thu May 25 , 2023
வீட்டுக்கு, வீடு வாசற்படி இருப்பதைப் போல சண்டை, சச்சரவுகள் இல்லாத திருமண வாழ்க்கை இருக்கவே முடியாது. ஆனால், அதற்காக வெறுமனே சண்டை, சச்சரவுகள் மட்டுமே இருந்தால் திருமண வாழ்க்கை கசப்பானதாகத் தானே இருக்கும். அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. ஆகவே, திருமண வாழ்க்கையை என்றென்றும் மகிழ்ச்சிக்குரியதாக வைத்துக் கொள்ள 5 எளிமையான ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தக் கூடாது :  நீங்கள் இருவருமே வெளிப்படையாக பேசிக் […]

You May Like