TVK Vijay: புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு தொப்பி அணிந்து, முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து தொழுகை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
தவெக தலைவர் விஜய் தற்போது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறார், மேலும் அவர் அதிமுகவுடன் எந்த கூட்டணியும் அமைக்காமல் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தவெக சார்பில் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க 15 உள்ளூர் மசூதிகளைச் சேர்ந்த இமாம்கள் அழைக்கப்பட்டனர், மேலும் கிட்டத்தட்ட 3,000 பேர் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய், தலையில் தொப்பி அணிந்து மாலை தொழுகையில் பங்கேற்று, தனது முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து நோன்பை கடைபிடித்தார். அப்போது, முழு வெள்ளை நிற உடையில், ஒரு தொப்பியுடன் காணப்பட்டார்.
முன்னதாக, விஜய் ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து இஸ்லாமிய வழக்கப்படி பிரார்த்தனை செய்தார், பின்னர் இப்தார் சடங்குகளில் பங்கேற்று ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகளுக்கு விருந்து வைத்தார். மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி விருந்து அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Readmore: ஏப்ரல் 1 முதல் புதிய UPI விதிகள்!. இதை செய்ய தவறினால் உங்கள் மொபைல் எண் ரத்து செய்யப்படலாம்!.