கும்பகோணம் காசிராமன் தெருவில் இருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் சென்ற 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 16ஆம் தேதி தீ விபத்து உண்டானது இந்த கொடூர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர் 18 குழந்தைகள் காயமடைந்தனர். வருடம் தோறும் இந்த உயிரிழந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன்படி 19 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தங்களுடைய வீடுகளில் இறந்த குழந்தைகளின் புகைப்படத்தின் முன்பு தின்பண்டங்களை செய்து வைத்து அகல்விளக்கு, மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றை ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதோடு, தீபத்து சம்பவம் நடைபெற்ற காசிராமன் தெருவில் இருக்கின்ற பள்ளி முன்பு உயிரிழந்த 94 குழந்தைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. இந்த பதாகைக்கு பெற்றோர்கள் தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டிருக்கின்ற நினைவு மண்டபத்திலும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியிட்டோர் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.