fbpx

தமிழகமே பரபரப்பு… அனைவரும் எதிர்பார்த்த ஜெ. மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல்…!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று முழு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யவுள்ளது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான தகவல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனி நபர் ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்கிறது. 500 பக்க விசாரணை அறிக்கையை சமர்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, முதல்வரிடம் கால அவகாசம் கோரினார்.

2017 செப்டம்பரில் அப்போதைய அதிமுக அரசால் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், 22 செப்டம்பர் 2016 அன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், 2016 டிசம்பர் 5 அன்று அவர் உயிரிழந்த வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வந்தது. ‘மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும், 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் வழங்கி நீட்டிக்கப்பட்டது.

இந்த விசாரணையில், அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக், அவரது நெருங்கிய உதவியாளர் சசிகலாவின் உறவினர்கள், பணியில் இருந்த ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 158 பேரிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணையானது நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை இன்று முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Vignesh

Next Post

TRB: 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த சான்றிதழ் கட்டாயம்...! ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி உத்தரவு...!

Sat Aug 27 , 2022
முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; 2020 – 21-ம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் […]

You May Like