அறுபது, எழுபதுகளில் நட்சத்திரமாக ஜொலித்த மும்பையைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அப்பாஸ் மூன்டாசார் காலமானார்.
மும்பையைச் சேர்ந்தவர் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் அப்பாஸ் மூன்டாசார். 82 வயதாகும் இவர் 60, 70 களில் கூடைப்பந்தாட்டத்தின் நட்சத்திரமாக ஜொலித்தவர். ஹல்க் திரைப்படத்தில் ஜைஜாண்டிகான உருவம் மற்றும் நசீப் திரைப்படத்தில் உயரமான குத்துச்சண்டை வீரராக வலம் வரும் அமித்தாப்பச்சனுக்கு முன் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்றால் அது மூன்டாசார்தான். மக்களை கவரும் திறனாலும் அதிக துள்ளலுடன் பந்தில் விளையாடு அவரது தந்திரங்களாலும் வெகுவாக கவந்தவர். மக்கள் இவரைக் காண ஆயிரக்கணக்கில் திரள்வார்கள்.
நசீர் திரைப்படத்தில் குத்துச்சண்டையின் போது அமித்தாப் நாக் அவுட்டை சமாளிப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் அமித்தாப் உயரமான நபர் என்றால் அந்த காட்சியில் இவர் ஒரு சிறு பாத்திரத்தில் வந்திருப்பார். அந்த இடத்தில் சக்திவாய்ந்த நடுவர்கள் கூட இவரது ’5’11’’ உயரத்தை பார்த்து அதிர்ந்து போய் இருப்பார்கள் அந்த அளவுக்கு இவரது தோற்றம் இருக்கும்.
கூடைப்பந்தாட்டத்தில் டெக்னிகலாக கூறப்படும் டிபன்டர் நாஸ்ட்ரில் அல்லது ஸ்கிம்மிங் அரவுண்ட் த க்னீ போன்றவற்றில் அதிக அளவு பாயிண்டுகளை குவிப்பவர். புத்திசாலித்தனமாக விளையாடும் இவரது ஆட்டத்தை பார்த்து நடுவர்கள் கூட விதி புத்தகங்களை பார்த்து மதிப்பளிப்பார்கள். இருந்தாலும் நடுவர்கள் இவர் ஆட்டைத்கை் கண்டே அதிர்ந்து போவார்கள்.
60, 70களில் இவர் இந்திய அளவில் டொமஸ்டிக் ஆட்டத்தில் விளையாடிய 10 ஆட்டங்களில் 9ல் பட்டங்களை வென்று இந்தியாவின் மிகச் சிறந்த கூடைபந்தாட்ட வீரர் என பாராட்டு பெற்றார். ரயில்வே அணியில் கவரப்பட்ட நாயகனாகவும் இருந்தார். கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார். இரண்டு நாட்கள் வென்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.