fbpx

Acer நிறுவனத்தில் மிகப்பெரிய தகவல் திருட்டு.. 160 ஜிபி தரவுகளை விற்பனைக்கு வைத்த ஹேக்கர்கள்..

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் பல்வேறு சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.. அந்த வகையில் தகவல் திருட்டு என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.. ட்விட்டர், பேஸ்புக் போன்ற பல முன்னணி தளங்களில் கூட, தனிநபர்கள் தகவல்கள் திருடப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஏசர் (Acer) நிறுவனத்தில், 160ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டு, அதிக ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்தும் ஆவணங்களை ஹோஸ்ட் செய்யும் சர்வரை, ஹேக்கர்கள் ஹேக் செய்து தகவல்களை திருடியதாக ஏசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்த தகவல்களை ஏசர் நிறுவனம் வழங்கவில்லை என்றாலும், ஒரு பிரபலமான ஹேக்கிங் மன்றத்தில் ஏசர் நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட 160 ஜிபி டேட்டாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது… திருடப்பட்ட தரவுகளில் தொழில்நுட்ப கையேடுகள், மென்பொருள் கருவிகள், தொலைபேசிகள், டேப்லேட், மடிக்கணினிகளின் தயாரிப்பு ஆவணங்கள், ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது..

எனினும் இந்த தரவு மீறல் விவகாரத்தை தொடர்ந்து விசாரித்து வருவதாக ஏசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.. ஆனால் ஹேக் செய்யப்பட்ட சர்வரில் வாடிக்கையாளர் தரவுகள் சேமிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

தகவல் திருட்டால் என்ன ஆபத்து..? தொழில்நுட்ப வல்லுநர்கள் வழக்கமாக செய்யப்பட்ட அனைத்து பழுதுபார்ப்புகளின் பதிவுகளையும் சேமித்து வைத்திருப்பார்கள்.. மேலும் நுகர்வோரை பற்றிய சில தரவுகளையும் சர்வரில் சேமித்து வைத்திருப்பார்கள். எனவே ஹேக்கர்கள், மின்னஞ்சல் ஐடிகள் அல்லது மொபைல் எண்கள் மூலம் மோசடி பாதிக்கப்பட்ட மக்களை செய்ய முயற்சி செய்யலாம். எனவே, அனைத்து ஏசர் பயனர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தெரியாத மெயில் ஐடிகள் மற்றும் மெசேஜ் ஆகியவற்றில் இருந்து இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

100 நாள் வேலை திட்டம்...! இன்றே கடைசி நாள்...! உடனே இதை செய்து முடிக்க வேண்டும்...! ஆட்சியர் அறிவிப்பு...!

Fri Mar 10 , 2023
ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை மூலம்‌ செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டு வரும்‌ வேலைவாய்ப்பில்‌ மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின்‌ அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப்‌ பணிகள்‌ வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில்‌ ஓர்‌ முன்னோடி முயற்சியாகும்‌. இது குறித்து விரிவான அறிவுரைகள்‌ அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌ இத்திட்ட வேலை அட்டை […]

You May Like