fbpx

வரலாற்றில் மிகப்பெரிய பாலியல் வழக்கு..!! 87 பெண்களை திட்டமிட்டு பலாத்காரம் செய்த மருத்துவர்..!! 6,000 மணி நேர வீடியோவும் சிக்கியது..!!

ஐரோப்பியாவில் உள்ள நாடான நோர்வேயில் வரலாற்றில் மிகப்பெரிய பாலியல் வழக்காக இது பார்க்கப்படுகிறது. முன்னாள் கிராம மருத்துவர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 87 பெண்களை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஆர்னே பை என்ற மருத்துவருக்கு 55 வயது ஆகிறது.

தனது மருத்துவப் பயிற்சியிலும், வீடுகளிலும் நடந்த சம்பவங்களில், இரண்டு சிறார்கள் உட்பட மொத்தம் 94 பெண்களைக் குறிவைத்து தனது நம்பிக்கை நிலையைப் பயன்படுத்திக் கொண்டார். இதுவரை 87 பெண்களை பலாத்காரம் செய்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் 14 வயதில் இருந்து 67 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. தனது மருத்துவ அதிகாரத்தை தன்னிடம் வரும் நோயாளிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார்.

அவருக்கு அதிகபட்சமாக 21 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இந்த வழக்கில் போலீசார் 6,000 மணிநேர வீடியோ பதிவுகளையும் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் பல நோயாளிகளின் அனுமதியின்றி அங்கீகரிக்கப்படாத மற்றும் அந்தரங்கமான மகளிர் மருத்துவ பரிசோதனைகளும் அடங்கியுள்ளது. விசாரணையில் ‘பெண் 18’ என்று குறிப்பிடப்பட்ட ஒரு பெண், தொண்டை வலிக்காக பையின் கிளினிக்கிற்குச் சென்றுள்ளர். பிறகு வலிமிகுந்த மற்றும் ஊடுருவும் பரிசோதனையை விவரித்தார், “நான் இறந்துவிடப் போகிறேன் என்று நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு பரவலான கண்டனத்தை ஈர்த்துள்ளது. மருத்துவத் தொழிலில் உள்ள நம்பிக்கையின் துஷ்பிரயோகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. 2022 ஆகஸ்ட் மாதம் மருத்துவர் ஆர்னே பை மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் புகாரளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டுகளின் தீவிரம் இருந்தபோதிலும், 2023இல் அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் வரை அவர் தனது பதவியில் இருக்க அனுமதிக்கப்பட்டார். தற்போதும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More : எத்தனை ஆதார் கார்டு இருந்தாலும் ஒரு மொபைல் நம்பர் போதும்..!! மக்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

English Summary

The shocking case of a gynaecologist who ‘raped’ 87 women in Norway

Chella

Next Post

உஷார்!. 2வது குழந்தை கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உள்ளதா?. ஆண்களே முக்கிய காரணம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

Tue Nov 26 , 2024
Be careful! Having problems conceiving a 2nd child?. Men are the main reason! Shock in the study!

You May Like