fbpx

மிகப்பெரும் சோகம்… ரஜினிகாந்திற்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்….

தமிழ் திரையுலகின் பிரபலமான பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார். இவருக்கு வயது 82 ஆகும். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை வசந்தா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

1944-ஆம் ஆண்டு பிறந்த இவர், முதலில் நாடகத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் இடம் பெற்றார். அதன்பிறகு சினிமாவுக்குள் நுழைந்த நடிகை வசந்தா சினிமாவில் கால்தடம் பதித்தார். நடிகை வசந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகனுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்திற்கு அம்மாவாக் நடித்தார். மேலும் “மூன்றாம் பிறை” படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும் நடித்துள்ளார்.

Kathir

Next Post

கர்நாடக மாநில துணை முதல்வராக…,! பொறுப்பேற்றார் டி.கே.சிவக்குமார்….!

Sat May 20 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டிவாரா திடலில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் முதலில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமைய்யா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சராக டி கே சிவகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். கர்நாடக மாநில துணை முதலமைச்சராக […]

You May Like