fbpx

47-வது புத்தகக் காட்சி…! மாணவர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்படும்…!

பபாசியின் 47-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனத்தில், 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் நடத்தப்படும்.

இந்த நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் ஜன.8ம் தேதி காலை 9 மணிக்கு முதல் முறையாக “சென்னை வாசிக்கிறது” என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த வார ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

Fri Jan 5 , 2024
என்னதான் வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளிவந்தாலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதை பார்க்கலாம். — காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜனவரி 5ஆம் தேதியான இன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. — நடிகர் மம்மூட்டி, நடிகை […]

You May Like