கேரள மாநில பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் தலச்சேரி பகுதியில் மம்முட்டி என்கிற 76 வயதான முதியவர் பள்ளூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து வருவது வழக்கமாக இருந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று அந்த உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அச்சமயத்தில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை முதியவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உதட்டை கடித்துள்ளார்.
இதனால் அந்த சிறுவன் தூக்கத்தில் இருந்து அதிர்ச்சி அடைந்து அலறி எழுந்துள்ளான். முதியவர் கடித்ததில் உதட்டில் காயம்பட்டு ரத்தம் வந்த நிலையில், உடனே ஓடிச் சென்று தன் பெற்றோரிடம் சொல்லியுள்ளான்.
பெற்றோர்களும் மகனின் உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பள்ளூர் பகுதி காவல் நிலையத்திற்குச் சென்று மம்முட்டி மீது புகார் கொடுத்தனர்.
காவல்துறையினர் மம்முட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.