fbpx

திருமணத்திற்கு சிலமணி நேரத்திற்கு முன்பு உயிரிழந்த மணப்பெண்.. காரணம் இதுதானா..!

லண்டன் நாட்டை சேர்ந்த நடியா ஜோசப் கோசின் என்ற இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னராக தூக்கத்திலேயே இறந்துள்ளார். நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. 

இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த சில மணி நேரத்திற்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. மணமகளின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என்று பிறகு தான் தெரியவந்துள்ளது. 

இத‌னிடையே நடியாவுக்கு கல்லீரல் பாதிப்பு நோய் இருந்தது அவரின் வருங்கால கணவரான டிவோனுக்கு தெரியாமலேயே இருந்திருக்கிறது. மேலும் இது நடியாவுக்கு இரண்டாவது திருமணம். 

நடியாவின் முதல் திருமணத்தில் 10 வயதில் ஒரு மகன் உள்ளான். நடியாவின் மரணம் பற்றி டிவோன் கூறுகையில், நடியாவின் திடீர் மரணம் என் மனதை மிகவும் பாதிக்கிறது.

நடியா மிகவும் அன்பானவர் என்மீது அக்கறையாக இருந்தார். சம்பவம் நிகழ்ந்த தினம் நள்ளிரவு 2 மணிக்கு எனக்கு திடீரென முழிப்பு வந்தது. அப்போது அருகில் இருந்த நடியா கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். ஆனால், அவள் அசைவற்ற நிலையில் கிடந்தாள் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

Rupa

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2023...! நுழைவு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Fri Jan 13 , 2023
 ஆட்டோ எக்ஸ்போ 2023 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் கண்காட்சி தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023. இதில் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்கின்றன. இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கான டிக்கெட் விலை நிலவரம் வெளியாகி உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் […]

You May Like