செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல்லாவரத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞருடன் நெருங்கி பழகி உள்ளார். இருவரும் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இதனை அடுத்து அந்தப் பெண்ணை ஹரிஷ் நேரில் பார்க்க வேண்டும் என அழைத்துள்ளார். இதனால் அந்த பெண் வீட்டில் தோழியின் பிறந்த நாள் விழாவிற்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 26-ம் தேதி ஹரிஷ் உடன் பல்லாவரம் சென்று உள்ளார்.
அங்கு இருவரும் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்கள். ஹரிஸ் அந்த பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதோடு இல்லாமல் நண்பர்களான நிசான் மற்றும் சல்மான் ஆகிய இருவரையும் தொலைபேசி மூலமாக அழைத்து உள்ளார். மீண்டும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்ணை மூவரும் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடு அவர் அணிந்திருந்த தங்க கம்பளை பறித்துள்ளனர்.
வலி தாங்க முடியாமல் தவித்த அப்பெண், நேற்று முன்தினம் இரவு, சிட்லப்பாக்கம், சங்கர் நகர் ஆகிய இடங்களில் இருந்து தனது சகோதரருக்கு, மாறி மாறி செல்போனில் குறுஞ்செய்தி மற்றும் இருப்பிடம் தொடர்பான லொக்கேஷனை அனுப்பியிருக்கிறார். அதை வைத்து, அவரது சகோதரர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பல்லாவரம் மகளிர் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு ஹரிஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் காவல்துறை வருவதற்கு முன்பு தப்பிச் சென்ற நிசாம் மற்றும் சல்மான் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஹரிஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காவல்துறை அப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்பே முழுமையான விவரங்கள் தெரியவரும் எனவும் அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பல்லாவரத்தில் இன்ஸ்டா மூலம் பழகிய இளம் பெண்ணை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொடுமைபடுத்தி நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more ; சில நேரம் முட்டை கூட விஷமாகும்.. முட்டை வாங்கும் போது கண்டிப்பா செக் பண்ணுங்க.. இல்லைனா பெரிய சிக்கல்!!