fbpx

மலையின் உச்சியில் இருந்து கவிழ்ந்த பேருந்து!! 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் நகருக்கு அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் என்ற நருக்கு அருகே பள்ளி பேருந்து ஒன்று மிகப்பெரிய விபத்து ஒன்றில் சிக்கியது. ஆதரவற்றோர் பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஒரண்டஸ் ஆற்றங்கரை வழியாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். மீட்புக் குழுவினர் மலை குன்றின் ஓரத்திலும் ஆற்றிலும் சுமார் 6 மணிநேரம் தேடியதாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.பேருந்து சாலையை விட்டு விலகிச் செல்ல காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து காவல் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More:முதுகு வலி பின்னியெடுக்குதா? அப்போ கண்டிப்பா நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

Rupa

Next Post

’எப்படியாவது இந்த பழக்கத்தை மட்டும் கைவிட்ருங்க’..!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்..!!

Sat Jun 8 , 2024
What happens if you take the pills with tea and coffee? Let's see what the experts have to say about it.

You May Like