நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் இன்றி தப்பினார்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இன்று அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மீது கார் ஏறியுள்ளது. வேறொரு காரில் யோகிபாபு பெங்களூரு புறப்பட்டார்.
நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார், நீண்ட நேரம் போராடி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சிக்கிய காரை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் இருந்த யோகி பாபுவை அங்க கூடியிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர், விபத்தில் சிக்கிய யோகி பாபுவின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.