ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரட்ரிட்ஜ் வின்சென்ட்( 23) இவர் சென்ற வாரம் சுற்றுலாவுக்காக சென்னைக்கு வந்தார். வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் வழிப்பறி கொள்ளையர்கள் தன்னிடம் கத்தி முனையில் மடிக்கணினி மற்றும் விலையை உயர்ந்த பொருட்களை பறித்து சென்று விட்டதாக புகார் வழங்கினார்.
அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். எதுவும் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வின்சென்ட்டிடம் கேள்வி எழுப்பிய போது விளையாட்டுக்காக இப்படி புகார் அளித்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக, அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது. அதோடு அவருடைய நடவடிக்கை தொடர்பாக தூதராக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் போவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது.