fbpx

ரவுடிகளுடன் கைகோர்த்த இன்ஸ்பெக்டர்.. வீட்டுக்கே சென்ற சிபிஐ அதிகாரிகள்..!! என்ன மேட்டர்?

சோழிங்கநல்லூரில் கார்த்திக் என்பவர் தனக்குச் சொந்தமான 18.25 சென்ட் நிலத்தை கோபாலகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளார் என்றும், இதை தடுக்க முயன்ற போது ரவுடிகளை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும், எனவே, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், நிலத்தை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு நீலாங்கரை இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்த்பாபு, 10 போலீசாருடன் சென்று பாதுகாப்பு அளித்ததாகவும், இந்த நில அபகரிப்பை தடுக்க முயன்ற போது எனது குடும்பத்தினரை ஆபாசமாக வார்த்தைகளில் திட்டியதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இப்படியே பிரச்சனை செய்தால் வழக்குப்பதிவு செய்வேன் என்று போலீஸ் தரப்பிலேயே மிரட்டியதாகவும் குறிப்பிட்டிடுந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கைதான் நேற்று கோர்ட் விசாரித்தது.. அப்போது, ஆனந்த் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டது.. இதையடுத்து, உதவி கமிஷனர் தலைமையிலான சிபிஐ ஐ., அதிகாரிகள், ஆனந்த்பாபு, கோபாலகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்..

அதுமட்டுமல்ல, சென்னை அண்ணா நகர் போலீஸ் குவார்ட்டஸில் உள்ள ஆனந்த்பாபு வீடு மற்றும் இந்த நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த, பெசன்ட் நகரில் உள்ள பெண் வங்கி அதிகாரியின் வீடு உட்பட, 4 இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.. ஆனந்த் பாபு, இப்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், சட்டம் – ஒழுங்கு இனஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.. தற்போது பொறுப்பில் உள்ள அதிகாரியின் வீட்டிலேயே, போலீஸ் நுழைந்து சோதனை நடத்தியிருப்பது, காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

Read more ; பரபரப்பு.. மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..!! 6 பேர் சுட்டுக் கொலை..

English Summary

The CBI officials raided four places, including the house of Inspector Anandbabu, who is accused of conniving with the raiders and trying to engage in land grabbing

Next Post

வாய்வழி சன்ஸ்கிரீன்.. வழக்கமான சன்ஸ்கிரீனை விட இது சிறந்ததா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Sat Sep 7 , 2024
What is oral sunscreen? Know all about this new beauty trend

You May Like