fbpx

இந்த 6️ மாவட்ட மக்கள் அடுத்த 3️ மணி நேரத்திற்கு வெளியே சென்றால் குடையை எடுத்து செல்ல மறக்காதீர்கள்….! காத்திருக்கும் கனமழை…..!

தமிழகம் முழுவதும் தற்போது வெயில் வாட்டி, வதைத்து வருகின்ற நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இதமான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் எதிர்வரும் 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வட தமிழக பகுதிகளை பொறுத்தவரையில் அந்த பகுதிகளின் மேல் மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழகம், புதுவை போன்ற பகுதிகளில் எதிர்வரும் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

விரைவில் மெரினாவில் பேனா சின்னம் - பொதுப்பணித்துறை தகவல்

Fri Jun 23 , 2023
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக மெரினாவில் பேனா சின்னம் நிறுவப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான அனுமதி மத்திய அரசு தரப்பில்  வழங்கப்பட்டுள்ள நிலையில் பேனா சின்னம் அமைப்பத்தற்கான பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.  ஐஐடி ஊழியர்களைக் கொண்டு விரைவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் […]

You May Like